பயிர்ச்செய்கையை நேரில் சென்று பார்வையிட்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்

President Mannar Farmer Agriculture Organic fertilizer
By Ashik Jun 09, 2021 09:32 AM GMT
Report

நாட்டில் உள்ள விவசாயிகள் தமது தோட்டம், விவசாய செய்கைகளை இயற்கை பசளை ஊடாக மேற்கொள்ள ஊக்குவிப்பதற்கு உரிய திணைக்களங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த அறிவுறுத்தலையும் கருத்தில் கொண்டு மன்னார் மாவட்டத்தில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் இயற்கை உற்பத்தி பசளையை மேற்கொள்ளும் இடம் மற்றும் இயற்கை பசளை ஊடாக மேற்கொள்ளும் பயிர்ச்செய்கையினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் இன்று காலை 9.30 மணியளவில் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். 

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடன் கமநல சேவை உதவி ஆணையாளர், விவசாய பணிப்பாளர், மன்னார் நகர சபையின் செயலாளர், மாவட்ட விவசாய உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து குறித்த விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது முதலில் மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கழிவுகளைக் கொண்டு தயாரிக்கும் இயற்கை பசளை தயாரிப்பு முறைகளை நேரடியாக சென்று பார்வையிட்டனர்.

மன்னார் நகர சபை பிரிவில் சேகரிக்கப்படுகின்ற கழிவுப் பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு கூட்டுப்பசளை தயாரிக்கப்பட்டு வருவதுடன், மாதம் எட்டாயிரம் கிலோ இயற்கை பசளை தயாரிப்பதுடன், விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

குறித்த பசளையை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டதோடு, குறித்த பசளையின் சரியான தரத்தினை பரிசோதனை செய்ய அனுப்பி வைக்க உள்ளதாக அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார். 

இதேவேளை பசளையில் குறைபாடுகள் எவையும் காணப்பட்டால் அவற்றை நிவர்த்தி செய்து தரமான பசளையை மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கும், ஏனைய மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து மன்னார் கரிசல் பகுதியில் இயற்கை முறையிலான பசளையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தோட்டச் செய்கையையும் அரசாங்க அதிபர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். 

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US