காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
அநுராதபுரம், தம்புத்தேகம, மலியதேவபுர பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் தனது விவசாய நிலத்தில் இருந்தபோதே இவ்வாறு காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்
இவ்வாறு உயிரிழந்தவர் மலியதேவபுர பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
காட்டு யானை தாக்குதல்
தனது வயலுக்கு வரும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக நேற்று (19.12.2025) மாலை இரண்டு நண்பர்களுடன் வயல்வெளிக்கு அருகிலுள்ள வீதியின் மதகு ஒன்றுக்கு அருகில் இருந்தபோதே, அங்கு வந்த காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது.

அவருடன் இருந்த இரண்டு நண்பர்களும் மதகுக்குக் கீழே குதித்து உயிர் தப்பித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் யானையிடமிருந்து தப்புவதற்காக வீதியில் ஓடிய போதிலும், அவரைத் துரத்திச் சென்று யானை தாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri