காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு!
திருகோணமலை பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் திருகோணமலை - வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுர பகுதியில் நேற்றைய தினம் (25.05.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வான்எல பகுதியைச் சேர்ந்த டபிள்யு. பஸ்நாயக்க ஐம்பது வயதுடைய இரண்டு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
வயலுக்கு துவிச்சக்கர வண்டியில் சென்றபோதே வான் எல பிரதான வீதியில் மறைந்திருந்து காட்டு யானை தாக்கியுள்ளது.
யானையின் தாக்குதலுக்குள்ளான நபரை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கந்தளாய் தள வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





விஜய்யின் மறைந்த தங்கை வித்யா, இப்போது உயிருடன் இருந்தால் இப்படி தான் இருப்பாரா? வீடியோ இதோ Cineulagam
