இலங்கையில் இன்று முதல் அதிகரிக்கும் கட்டணங்கள்
இலங்கையில், அதிகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு கட்டணங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.
இன்றையதினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து வகையான கடவுச் சீட்டு கட்டணங்களையும் திருத்த குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்து, அது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டிருந்தது.
அதிகரிக்கப்பட்ட கட்டணங்கள்
இதன்படி, ஒருநாள் சேவை கடவுச் சீட்டுக் கட்டணம் 15 ஆயிரம் ரூபாவில் இருந்து 20 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாதாரண சேவை கட்டணத்தை 3,500 ரூபாவில் இருந்து 5 ஆயிரமாக அதிகரிக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதேபோல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 3 வருடங்கள் செல்லுபடியாகும் ஒருநாள் சேவை கடவுச் சீட்டுக் கட்டணம் 7,500 ரூபாவில் இருந்து 9,000 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.
6 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான 3 வருடங்கள் செல்லுபடியாகும் சாதாரண சேவைக் கட்டணம் 2,500 ரூபாவில் இருந்து 3,000 ரூபாவாகும் அதிகரிக்கப்படுகின்றது.