துணிச்சலான கோலியின் துணிச்சலற்ற பேச்சு: தகர்ந்து போயுள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பு
நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடனான 20க்கு 20 லீக் போட்டியில் இந்திய அணி துணிச்சலுடன் துடுப்பாடவில்லை என்றும் களத்தடுப்பிலும் உத்வேகம் காட்டவில்லை என்றும் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி(Virat Kohli) தெரிவித்துள்ளார்.
துபாயில் நேற்று இரவு இடம்பெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணி வெற்றி கொண்டது. நியூசிலாந்தின் பந்துவீச்சுக்கு இந்திய அணியின் தடுமாறியதை அவதானிக்கமுடிந்தது.
இதன்போது இந்திய வீரர்களால் ஒட்ட எண்ணிக்கையை உயர்த்துவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவா்களின் முடிவில் 110 ஓட்டங்களையே பெறமுடிந்தது. பதிலுக்கு துடுப்பாடிய நியூசிலாந்து அணி இந்த இலக்கை எளிதாகப் பெற்று ஆட்டத்தில் வெற்றிபெற்றது.
இந்த தோல்வியுடன் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குரியதாகியுள்ள நிலையில், துணிச்சலான கோலியின் கருத்துக்கள் அடுத்தடுத்த போட்டிகள் தொடர்பில் இந்திய அணி ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தகர்த்துள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan