திருகோணமலையில் போதைப்பொருள் வியாபாரி கைது
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கஞ்சா போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (01.02.2023) காலை இடம்பெற்றுள்ளது.
இரகசிய தகவல்
ரொட்டவெவ பகுதியில் கஞ்சா போதைப்பொருளை மறைத்து வைத்திருப்பதாக பொலிஸ் விசேட பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த பகுதியிலுள்ள வீட்டை சோதனையிட்ட போது விற்பனைக்காக
வைக்கப்பட்டிருந்த அரை கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த ரத்தரங்
என்றழைக்கப்படும் சுனில் சாந்தகே ஹசேல பியசாந்த (28வயது) என்பவரே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கை
இதேவேளை குறித்த சந்தேகநபருடன் அவரது வீட்டில் தங்கி இருந்த நாத்தாண்டிய- இஹலமாவில பகுதியில் வசித்து வந்த தம்மிலகே தமித் பெரேரா (26வயது) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு ஏற்கனவே நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா போதைப்பொருள் வியாபாரியுடன் வீட்டில் தங்கி இருந்ததாகவும் தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் விசாரணைகளின் பின்னர்
திருகோணமலை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்
விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
