இலட்சக்கணக்கான விமானப் பயணச் சீட்டுக்களை இலவசமாக அறிவித்த நாடு
உலகம் முழுவதிலும் சுற்றுலாவாசிகளை கவர்ந்து இழுக்க 5,00,000 விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கவுள்ளதாக ஹொங்ஹொங் அறிவித்துள்ளது.
5 லட்சம் இலவச விமான பயணச்சீட்டுகள்! சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதியாக இயங்கிவரும் ஹொங்ஹொங் (Hong Kong), சுற்றுலாவை புதுப்பிப்பதற்காக இலவச விமான டிக்கெட்டுகளை வழங்கவுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கடுமையான கோவிட்-19 தடைகளுக்குப் பிறகு, பார்வையாளர்கள் , வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களை திரும்பக் கவரும் வகையில் 5 லட்சம் இலவச விமான பயணச்சீட்டுகளை உள்ளடக்கிய ஒரு விளம்பரப் பிரச்சாரத்தை ஹொங்ஹொங்கிற்கு வெளியிட்டது.
ஹலோ ஹொங்ஹொங்
'ஹலோ ஹொங்ஹொங்' (Hello Hong Kong) என தலைப்பிடப்பட்டுள்ள இந்த பிரச்சாரத்தின் தொடக்கத்தில் நகரத்தின் தலைவர் ஜான் லீ இதனை அறிவித்தார். இது "ஒருவேளை உலகின் மிகப்பாரிய வரவேற்பாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
ஹலோ ஹொங்ஹொங் பிரச்சாரம் நடனக் கலைஞர்கள் மற்றும் நகரின் முக்கிய மாநாட்டு மையத்தில், அதன் புகழ்பெற்ற துறைமுகத்திற்கு அடுத்ததாக, ரஷ்ய மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வாசகத்தைத் தாங்கிய பின்னணியில் நியான் விளக்குகளை ஒளிரச் செய்தது.
2019ல் அடிக்கடி வன்முறைப் போராட்டங்கள், 2020-ல் கடுமையான பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் கோவிட் பரவலின்போது மூன்று ஆண்டுகள் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் இந்நகரத்தின் சுற்றுலா துறை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ஹொங்ஹொங்கின் உலகளாவிய பிம்பத்தை சரிசெய்யவும், பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் அரசாங்கம் முயற்சி செய்கிறது.
ஏர்லைன்ஸ் கேத்தே பசிபிக், ஹொங்ஹொங் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹொங்ஹொங் ஏர்லைன்ஸ் ஆகியவை மார்ச் 1 முதல் ஆறு மாதங்களுக்கு வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிர்ஷ்டக் குலுக்கல், 1 வாங்கினால் 1 இலவசம் விளம்பரங்கள் மற்றும் போட்டிகள் உட்பட பல்வேறு விளம்பர நடவடிக்கைகள் மூலம் விமான நிறுவனங்களிடமிருந்து 2 பில்லியன் ஹொங்ஹொங் டொலர்கள் மதிப்பிலான இலவச விமான பயணச்சீட்டுகள் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடையில் ஹொங்ஹொங்கில் வசிப்பவர்களுக்கு கூடுதலாக 80,000 விமான டிக்கெட்டுகள் வழங்கப்படும், அதே நேரத்தில் கிரேட்டர் பே ஏரியாவில் வசிப்பவர்களும் இந்த பாலிசியிலிருந்து பயனடைவார்கள், எனவே மொத்தம் 700,000 டிக்கெட்டுகள் கிடைக்கும்.
கிரேட்டர் பே ஏரியா என்பது ஹொங்ஹொங்கை அண்டை நிலப்பரப்பு நகரங்களுடன் இணைக்கும் சீன அரசின் முயற்சியாகும்.
2019-ஆம் ஆண்டில் தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்பு, ஹொங்ஹொங் 56 மில்லியன் சுற்றுலாவாசிகளைப் பெற்றது (அதன் மக்கள்தொகையின் 7 மடங்குக்கும் மேல்). ஆனால் கோவிட் தடைகளுக்கு மத்தியில் 2022-ல் மொத்தத்தில் 1% பார்வையாளர்களை மட்டுமே பெற்றது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

திருமணமான 8 மாதத்தில் புதுமணப்பெண் மரணம்! சிக்கிய கணவன், மாமியார்..அம்பலமான அதிர்ச்சி உண்மை News Lankasri

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam
