விமான விபத்தில் பலியான அமெரிக்காவின் பிரபல விண்வெளி வீரர்
அமெரிக்கா பிரபல விண்வெளி வீரர் வில்லியம் ஆண்டர்ஸ்(William Anders)தனது 90ஆவது வயதில் விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வில்லியம் ஆண்டர்ஸ் அப்பல்லோ-8 விண்கலத்தில் சென்று நிலவை சுற்றி வந்த மூன்று நபர்களில் ஒருவராவார்.
அதுமட்டுமன்றி விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் முதல் வர்ணப் புகைப்படமான எர்த்ரைஸ் புகைப்படத்தை இவரே எடுத்துள்ளார்.
மீட்கும் பணி
இந்த நிலையில் வில்லியம் ஆண்டர்ஸ் , தனக்கு சொந்தமான ஒரு சிறிய ரக விமானத்தை தனியாக இயக்கி கொண்டு வாஷிங்டனில் இருந்து புறப்பட்டபோது வாஷிங்டன் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தீவுகளுக்கு இடையே ஜோன்ஸ் தீவில் உள்ள கடலில் விமானம் விழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் வில்லியம் ஆண்டர்ஸ் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அவரது உடலை மீட்கும் பணி நடந்து வருவதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
