நள்ளிரவில் இளம்பெண் கொடூரமாக வெட்டிப்படுகொலை! சந்தேகநபர் தப்பியோட்டம்
குருநாகல் மாவட்டம், பன்னலை பிரதேசத்தில் 27 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பன்னலை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாகவே இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரேத பரிசோதனை
நேற்று நள்ளிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த 31 வயதுடைய கணவர், தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, ஆத்திரமடைந்த கணவர் கூர்மையான ஆயுதத்தால் மனைவியை வெட்டியுள்ளார்.
பாரிய வெட்டுக் காயங்களுக்குள்ளான அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசேட விசாரணை
இந்த கொலை சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரான கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் விசேட விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan