யாழில் நிமோனியாவால் உயிரிழந்த குடும்பப் பெண்
யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவர் நேற்றுமுன்தினம்(17) நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ். தாவணி பகுதியைச் சேர்ந்த சின்னையா ரஜீனா (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெண்ணுக்கு உடல் சுகயீனம்
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணுக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நோய் குணமடையலாம் நிலையில் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பரிசோதனை
இருப்பினும் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
நிமோனியா காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
