குடும்ப பெண் கொடூரமான வெட்டிப்படுகொலை - கணவர் தலைமறைவு
அம்பாந்தோட்டை - வலஸ்முல்லை பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவரினால் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டு, மூன்று பிள்ளைகளின் தாயாரான குடும்ப பெண் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர் வலஸ்முல்லை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே வாக்குவாதம்
நேற்று மாலை மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்வாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கணவர் வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலுக்கு பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரால் தீவிர தேடுதல் வேட்டை
கொலை சம்பவத்தை செய்த பின்னர் 42 வயதுடைய கணவர் அந்த பகுதியிலிருந்து தலைமறைவாகி தப்பியோடியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தப்பியோடிய கொலையாளியை கைது செய்வதற்காக பொலிஸாரால் தீவிர தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.