குடும்பஸ்தரொருவர் சுட்டும் வெட்டியும் படுகொலை! - இரு சந்தேகநபர்கள் கைது
குடும்பஸ்தர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
அம்பாந்தோட்டை, வீரக்கெட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெபோக்காவ கிழக்கு மற்றும் எம்பிலிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 33, 29 வயதுகளையுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெபோக்காவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரைப் பொலிஸார் கைதுசெய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து தெபோக்காவ பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கி, கைக்குண்டு என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து இந்த சம்பவத்துடன் தொடர்புடைய
மற்றைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும்
தோட்டாக்கள் என்பவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam