பொலன்னறுவையில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப்படுகொலை
பொலன்னறுவை - இலங்காபுரம் பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் இன்றையதினம் (04.08.2023) பதிவாகியுள்ளது.
இலங்காபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதையுடைய ஆர்.சமரக்கோன் என்பவரே வீட்டில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நால்வர் கொண்ட குழு
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் கொண்ட குழுவே குறித்த குடும்பஸ்தர் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.