முத்தையன்கட்டு பகுதியில் விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
முல்லைத்தீவு (Mullaitivu) ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டுப் பகுதியில் கடந்த 10ஆம் திகதி உந்துருளி விபத்தில் காயமடைந்த 27 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வவுனியாவினை பிறப்பிடமாக கொண்டு முள்ளியவளையில் வசிந்து வந்த 27 அகவையுடைய சிறீஸ்கந்தராசா அரவிந்தன் என்ற குடும்பஸ்தரே நேற்று (17.06.2024) உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
முத்தையன்கட்டில் கூலி வேலை செய்து வந்த குறித்த குடும்பஸ்தர் வீதியால் சென்று கொண்டிருந்த வேளை 17 வயதுடைய இளைஞன் ஓட்டிச்சென்ற உந்துருளி மோதியதில் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
எனினும், விபத்தினை ஏற்படுத்திய 17 வயதுடைய இளைஞன் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 7 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
