குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை!
களுத்துறை, மீகஹதென்ன பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த 35 வயது நபர் ஒருவரே நேற்றிரவு இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மீகஹதென்ன வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக மீகஹதென்ன வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பகையே இந்தப் படுகொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.



