யாழில் காய்ச்சல் ஏற்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழில் வயிற்றுவலியுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(21) காலை இடம்பெற்றுள்ளது.
கைதடி மத்தி, கைதடி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் விக்கினேஸ்வரன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த 18ஆம் திகதி வயிறு வீக்கத்துடன் வயிற்று வலியும், காய்ச்சலும் ஏற்பட்டது.

இந்நிலையில் 19ஆம் திகதி அதிகாலை தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.00 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Bigg Boss: கதவை திறக்க பிக்பாஸிடம் கூறிய பிரஜன்... பரிதாப நிலையில் விக்ரம்! வெடிக்கும் சண்டை Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri