யாழில் விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில்(Jaffna) இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் இன்று(20) காலை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ராஜலிங்கம் கேசவன் (வயது 48) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்பஸ்தர் உயிரிழப்பு
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கடந்த 13ஆம் திகதி காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி செம்மணி வீதியூடாக பயணித்துக்கொண்டு இருந்தார்.

இதன்போது அவ்வீதியால் வந்த அரச பேருந்து அவரை முந்திச் செல்ல முற்பட்டபோது அவர்மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை
உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போலீசாரால் கைது செய்யப்பட்ட பல்லவன், ஷாக்கில் சகோதரர்கள்... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam