யாழில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வாழைத்தோட்டத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ், உரும்பிராய்ப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது 36 வயதுடைய இணுவில் வடக்கைச் சேர்ந்த துரைராசா உசாந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உரும்பிராய் சிவன் வீதியில் உள்ள வாழைத்தோட்டம் ஒன்றில் 4 இளைஞர்கள் சேர்ந்து போதை ஊசி ஏற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது அதிக போதை காரணமாக ஒருவர் சுய நினைவிழந்திருந்த சமயம் சுய நினைவை இழந்து நிலையில் ஒருவர் வீழ்ந்து கிடக்கின்றார் என்று பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற கோப்பாய் பொலிஸார் போதையில் இருந்தவரை பார்த்தபோது
உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.
இதனால் உயிரிழந்தவருடன் இணைந்து போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்களைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
