ரிவால்வர் ரக துப்பாக்கியுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது
நீர்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாபம் வீதியில், ரிவால்வர் ரக துப்பாக்கி மற்றும் போதைப்பொருட்களுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ஜெயவர்தனபுர முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மிட்கப்பட்ட பொருட்கள்
சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கி, 7 கிலோகிராம் 974 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் மற்றும் 1 கிலோகிராம் 580 கிராம் கஞ்சா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சந்தேகநபர் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய குடும்பஸ்தர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |