குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பு, வாழைச்சேனை, சுங்காங்கேணி குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(7.7.2026) இடம்பெற்றுள்ளது.
சுங்காங்கேணி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
உயிரிழப்பு
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வாழைச்சேனை நீதிமன்றத்துக்கு அருகாமையிலுள்ள சுங்காங்கேணி - தாமரைக்குளத்தில் மீன்பிடிப்பதற்காக, மேற்படி நபர் நேற்று(6.7.2026)குளத்தில் வலையை வீசிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இன்று காலையில் குளத்தில் வீசிய வலையை மீட்டு, மீன்களைப் பிடிப்பதற்காக அவர் மீண்டும் குளத்துக்குச் சென்றுள்ளார்.

குளத்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக வாழைச்சேனைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், உயிரிழந்த நபருக்கு வலிப்பு நோய் இருந்தது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மீன்பிடிக்கும்போது ஏற்பட்ட திடீர் வலிப்பு காரணமாகவே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

நீதிமன்ற உத்தரவைப் பெற்று, சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரகசிய தகவல் வழங்கும் கைதிகளை இலக்கு வைத்து தாக்குதல்! பின்னணியில் மிகப்பெரும் சதி - நீதி அமைச்சரின் அதிர்ச்சித் தகவல்
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
விஜய் குறித்து ரசிகர்களுக்கு தெரியாத விஷயத்தை கூறிய இயக்குனர் லிங்குசாமி... என்ன தெரியுமா? Cineulagam
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan