வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரின் விபரீத முடிவு
வவுனியா- தாண்டிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாண்டிக்குளம் - ஒயார்சின்னக்குளம் பகுதியில் வசித்து வந்த பாலசிங்கம் சுரேஷ் என்ற 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் (31.05.2023) உணவருந்திவிட்டு நித்திரைக்குச் சென்ற குறித்த குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதிர்ச்சியடைந்த மனைவி
இரவு தூக்கத்தில் இருந்து கண் விழித்த மனைவி கணவனை நீண்ட நேரம் காணாததால் வீட்டுக்கு வெளியே சென்று பார்த்த போது வீட்டின் முன்புறமாகவுள்ள மரத்தில் தூக்கில் தொங்குவதை அவதானித்துள்ளார்.
பின்னர் அயல் வீட்டாரின் உதவியுடன் வவுனியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கிராம சேவையாளர் மற்றும் பொலிஸார் சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தடயவியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





மட்டக்களப்பு-புதுக்குடியிருப்பு இனப்படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம் 40 நிமிடங்கள் முன்

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
