கடிதம் எழுதிவைத்து நடுவீதியில் தீக்குளித்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று (26) காலை ஒருவர் தீக்குளித்து தவறான முடிவெடுத்துள்ளார்.
இதன்பின்னர், கடுமையான தீக்காயங்களுடன் லிந்துல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
ஹட்டன் பகுதியை சேர்ந்த குறித்த நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.
கடிதம் எழுதி வைத்துவிட்டு தவறான முடிவு
தனது 9 வயது மகனுக்கு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி தனது மனைவி ஊடாக போதை பொருள் வழங்கி வருவதாகவும், சில அரச அதிகாரிகளும் வைத்தியரும் இணைந்து தனது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு முயற்சிகள் முன்னெடுத்து வருவதாகவும் குற்றம்சுமத்தியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் டிக்கோயா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியிடம் முறைப்பாடு செய்த போதிலும் இந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து தனது முறைப்பாட்டை இன்றைய தினம் தலவாக்கலை பிரதேச செயலாளரிடம் ஒப்படைப்பதற்கு வந்த போதிலும் அவர்களும் அதனை ஏற்காததை தொடர்ந்து தனது பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார் .
மேலும், தனது குடும்ப உறுப்பினர்கள் தனது குழந்தைகளிடமிருந்து தன்னைப் பிரித்துவிட்டதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு, தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக ஹட்டன் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளதாகவும், அந்த முறைப்பாட்டில் நீதி நிலைநாட்டப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தலவாக்கலை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலதிக தகவல் - திவா
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam