இலங்கையை உலுக்கிய கோர சம்பவத்தில் முழு குடும்பமும் பலி - பின்னணியிலுள்ள மர்மம்
இலங்கையில் இன்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் குடும்பம் ஒன்று உயிரிழந்தமை முழு நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
கொழும்பின் புறநகர் பகுதியான கடுவலை நகரிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்படுவதற்கான சரியான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த விற்பனை நிலையம் தரமற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணை நடத்தப்படும் என நகர சபை தெரிவித்துள்ளது.
முழு குடும்பமும் பலி
எனினும், விற்பனை நிலைய கட்டடத்தின் உரிமையாளர் தெரிவிக்கையில், கட்டடத்தின் பின்புறத்தில் 50 அடி ரோலர் கதவு ஒன்று உள்ளதாகவும், அவசரத் தேவைக்கு வெளியேறுவதற்கான வாய்ப்பு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பான நிலை இருக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள உரிமையாளர், எவ்வித பாதுகாப்பற்ற தன்மையும் இருக்கவில்லை என அவர் கூறுகிறார்.
இவ்வாறான நிலையில் கட்டடத்தின் கீழ் தளத்திலிருந்து பரவிய தீ, மேல் தளத்திலுள்ள படுக்கை அறையில் இருந்தவர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
இது குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
படுக்கை அறையில் பரவிய தீ
கடுவலை நகரிலுள்ள 2 மாடிக் கட்டடமொன்றில் அமைந்துள்ள மின்சாதனப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மாலபே, தலஹேன பகுதியை சேர்ந்த குறித்த தம்பதியினர், மின்சாதன பொருட்கள் விற்பனை நிலையத்தை நடத்துவதற்காக இக்கட்டடத்தை வாடகைக்கு எடுத்திருந்தனர். அத்துடன், தமது இரண்டு பிள்ளைகளுடன் அதன் மேல் மாடியில் தங்கியிருந்துள்ளனர்.
தமது வியாபார நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு குறித்த குடும்பத்தினர் மேல் மாடியில் உறங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.
கட்டடம் முழுவதும் தீ பரவியதால், குறித்த குடும்பத்தை சேர்ந்த நால்வரும் மேல் மாடியில் சிக்கிக்கொண்டனர்.
பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து அவர்களை மீட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், கடுமையான தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈ.பி.டி.பி. முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு மரண தண்டனை! சிறைச்சாலை முன் திரண்ட உறவினர்களால் பதற்றம்