கல்முனையில் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட 119 குடும்பங்களின் அங்கத்தவர்கள்

Sri Lankan Tamils Tamils Sri Lanka Sri Lankan Peoples
By Farook Sihan Oct 16, 2026 07:51 AM GMT
Report

கல்முனையில் காணாமல்போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு இன்று (16.10.2026) காலை அழைக்கப்பட்டுள்ளனர்.

இச்சந்திப்பின் போது, தசாப்த காலங்களாக உறவுகளைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் குடும்பங்களின் பரிதவிப்பும், அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் நிலைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

“1990ஆம் ஆண்டு எட்டாம் மாதம் இரண்டாம் தேதி வீட்டைவிட்டு அழைத்துச் சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை. கிடைக்கும் வரை நாங்களும் இந்த இடமெல்லாம் தேடித் திரிகிறோம். ஒரு முடிவுமே இல்லாமல் 36 வருஷமாக என் புருஷனைக் காணவில்லை” எனத் துயரம் நிறைந்த குரலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.

கல்முனையில் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட 119 குடும்பங்களின் அங்கத்தவர்கள் | Families Summoned By The Office On Missing Persons

காணாமல் ஆக்கப்பட்டோரின் பட்டியல்

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர், சட்டத்தரணி வடிவேல் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், எமது அலுவலகத்திடம் சுமார் 25000 பேரை உள்ளடக்கிய காணாமல் ஆக்கப்பட்டோரின் பட்டியல் உள்ளது. இரட்டைப் பதிவு போன்ற சரிபார்ப்புகளுக்குப் பின்னர் தற்போது கைகளில் 17000 பேரின் தரவுகள் உள்ளன.

இந்த 17000 பேரில் இதுவரை ஏறக்குறைய 11000 பேரிடம் முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூபா 2 இலட்சம் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியும் தொடர் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்முனையில் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட 119 குடும்பங்களின் அங்கத்தவர்கள் | Families Summoned By The Office On Missing Persons

இதனிடையே, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு சில நிறுவனங்களும் தனிநபர்களும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடமிருந்து மூல ஆவணங்களைச் சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இதுகுறித்து அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், OMP தனது பணிகளை முன்னெடுக்கும் போது பிறப்புச் சான்றிதழ், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களின் சான்றுபடுத்தப்பட்ட பிரதிகள் அல்லது நிழற்படப் பிரதிகளை மாத்திரமே சேகரிப்பதாகவும், பாதிக்கப்பட்டோரின் மூல ஆவணங்களை எவரும் வழங்குவதைத் தவிர்க்குமாறும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கல்முனையில் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட 119 குடும்பங்களின் அங்கத்தவர்கள் | Families Summoned By The Office On Missing Persons

மேற்குறித்த நிகழ்வுகள் இரு நாட்களாக கல்முனை பிரதேச செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் வியாழன் மற்றும் வெள்ளி (இன்று) வரை நடைபெற்று வருவதுடன் பல்வேறு இடங்களில் இருந்தும் தமது உறவுகளை நாட்டில் ஏற்பட்ட கடந்த கால அசாதாரண காலகட்டத்தில் குடும்ப உறவுகளை இழந்த உறவுகள் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

[B6TQK6 ]

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US