லெபனான் நிலைமை மோசம்: இஸ்ரேல் தாக்குதலால் குடும்பங்கள் தேசிய திரையரங்கில் அடைக்கலம்
லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்கள் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடி அலைந்து வருகின்றனர்.
தலைநகர் பெய்ரூட்டில் உள்ள தேசிய திரையரங்கம் தற்போது பலருக்குத் தஞ்சமளிக்கும் இடமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொடூரமாக உணரும் மக்கள்
இந்த சம்பவம் தொடர்பில், தெற்கு நகரமான டயரிலிருந்து (Tyre) தப்பி வந்த 73 வயதான முகமது பைடூன் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

அதில், "இஸ்ரேல் ஒரு குறிப்பிட்ட இலக்கை மட்டும் அறிவிப்பதில்லை, ஒட்டுமொத்தப் பகுதிகளையுமே காலி செய்யச் சொல்கிறார்கள். அவர்களிடம் கருணை என்பதே கிடையாது, எதிரிக்குக் கருணை என்பது தெரியாது.
தனது வாழ்நாளில் பல போர்களைக் கண்டுள்ள போதிலும், இந்தப் போர் மற்றெல்லாவற்றையும் விட வித்தியாசமாகவும், கொடூரமாகவும் உணர்வதாகவும், ஆனாலும் அவர் அச்சப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனக்கு பயமில்லை. நமக்கு என்ன நடக்க வேண்டும் என்று இறைவன் எழுதி வைத்திருக்கிறானோ, அதுதான் நடக்கும் என்றார்.