இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கான செய்தி - விதிக்கப்படும் வரி குறித்து வெளியான தகவல்
வரி திருத்தங்களின் ஒட்டுமொத்த விளைவாக, வாகன இறக்குமதிக்கான மொத்த சுங்க வரி கட்டமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் புதிய சுங்க வரி திருத்தங்கள் குறித்து வழங்கியுள்ள விளக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிதி அமைச்சகத்தின் நிதி கொள்கை திணைக்கள அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, வரி அமைப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
வரி திருத்தம்
அந்த வகையில் சுங்க இறக்குமதி வரி - தற்போதுள்ள 20 வீத வரி விகிதம் 30 வீதமாக ஆக உயர்த்தப்பட உள்ளது.
சுங்க வரி கூடுதல் கட்டணம் - தற்போது நடைமுறையில் உள்ள 50 வீத கூடுதல் கட்டணம், மற்றொரு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ரத்து செய்யப்பட உள்ளது.

இந்த வரி திருத்தங்களின் ஒட்டுமொத்த விளைவாக, வாகன இறக்குமதிக்கான மொத்த சுங்க வரி கட்டமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது.
இருப்பினும், ஏப்ரல் 1 முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு, தற்போதுள்ள வரிகளுடன் கூடுதலாக 2.5 வீத சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி மட்டும் சேர்க்கப்படும்.
இதுவே வாகன இறக்குமதியாளர்களுக்கு ஏற்படும் ஒரே கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 19 மணி நேரம் முன்
வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுவா? Manithan
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri