நானுஓயாவில் சீரற்ற காலநிலையால் பாதிப்பிற்கு உள்ளான குடும்பங்கள்
நானுஓயா – சமர்செட் , லேங்டல் தோட்டத்தில் நேற்று (30) அதிகாலை தொடர் லயன் குடியிருப்பில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 28 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் தற்காலிகமாக இரண்டாவது நாளாகவும் நானுஓயா கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு உலர் உணவு பொருட்களை நுவரெலியா பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் மற்றும் தோட்ட நிர்வாகத்தினர் இணைந்து வழங்கி வருகின்றன.
தற்காலிக முகாம்களுக்கு
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவும் ஒவ்வொரு முறையும் நானுஓயா – சமர்செட் , லேங்டல் தோட்டத்தில் வாழும் மக்கள் பாதித்து வருவதாகவும் மேலும் இந்த பகுதி மக்கள் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இவ் மண்சரிவு அபாயத்திற்கு உள்ளாக்கியிருந்த போதிலும் தற்போது காணப்படும் மழை காலங்களில் மாத்திரம் தற்காலிக முகாம்களுக்கு செல்வதும், பின்பு காலநிலை வழமைக்கு திரும்பிய பின் வீடுகளுக்கு செல்வதுமாகவே வழமையாக கொண்டுள்ளோம்.
இப்போதும் குறித்து மண்சரிவினால் சில வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
எனவே இனி வரும் நாட்களில் பாதிக்கப்பட்ட தங்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பாதிக்கப்பட்ட மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
