தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் தவறான பிரசாரங்கள்: விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தொடர்பில் நான் தெரிவித்திருந்த கருத்துக்கள் பற்றி தவறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விக்னேஸ்வரனால் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள கேள்வி பதிலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும் போது ஒட்டு மொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்கு தமது வாக்குகளை அளிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை.
விருப்பு வாக்கு
விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயம். இது தொடர்பில் அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

இன்னாருக்கு தான் தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்கினை அளிக்க வேண்டும் என்று நான் எந்த கோரிக்கையினையோ அல்லது ஆலோசனையையோ முன்வைக்கவில்லை.

பல கேள்விகள் பத்திரிகையாளர்களினால் முன்வைக்கப்படும் போது, எமது அடிப்படை குறிக்கோள்களை நாங்கள் சிதைத்திருப்பதாக எனது பதில்களை திரித்து வெளியிடும் பழக்கம் சில ஊடக சகோதரர்களுக்கு உண்டு என்பதைக் காணமுடிகின்றது. ஆனால் அவை என்னுடைய கருத்துக்கள் அன்று” எனக் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எலிமினேஷனுக்கு பிறகு அழுத முகத்துடன் வீட்டிற்கு வந்த பிக்பாஸ் 9 பிரவீன்... அடுத்து நடந்த விஷயம், வீடியோ, இதோ Cineulagam
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
முத்து சொல்ல சொல்ல பதற்றத்தின் உச்சத்தில் ரோஹினி, அப்படி என்ன தெரிந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam