யானை வாலை பிடித்ததே சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம்
யானையின் வாலை பிடித்து தொங்குவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தவறான முடிவு காரணமாக அந்த கட்சிக்கு தற்போது வீழ்ச்சியான நிலைமைக்குள் வீழ்ந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyavasam)தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இழந்து போன கட்சியின் ஆதரவாளர்களை மீண்டும் கட்சியின் பக்கம் நோக்கி ஈர்ப்பதற்காக பொதுஜன பெரமுன மீது விமர்சனங்களை முன்வைப்பதில் பயனில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் உண்மையில் எந்த பிரச்சினையும் இல்லை. கட்சி வீழ்ந்துள்ள நிலைமையை அவர்கள் நடந்துக்கொள்ளும் விதத்தில் காணக் கூடியதாக இருக்கின்றது.
முக்கியமாக அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமில்லை. நாட்டுக்கு தேவையான சட்டங்களை நிறைவேற்றும் போதே மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படுகிறது.
பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்த தவறையும் செய்யவில்ரைல எனவும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் பொதுஜன பெரமுனவை சேர்ந்த சிலருடன் மாத்திரமே பிரச்சினை உள்ளது எனவும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர (Dayasri jeyasekara) தெரிவித்துள்ளார்.
சிலர் எமது கட்சியின் தலைவருக்கு எதிராக வெறுமனே தாக்குதல் தொடுக்கின்றனர். அவற்றை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது என்பதால், பதிலளிக்க கட்சியினருக்கு அனுமதியுள்ளது.
எவ்வாறாயினும் அந்த பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையல்ல. அவற்றை கூடிய விரைவில் தீர்த்துக்கொள்வோம் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri