டொலரின் வீழ்ச்சி..! உயரும் யூரோ மற்றும் பிற நாணயங்களின் மதிப்பு
2025ஆம் ஆண்டு நிலவரப்படி, யூரோவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் மதிப்பு 13 சதவீதமாக குறைந்துள்ளதோடு ஜப்பானிய யென்னுக்கு எதிரான அமெரிக்க டொலரின் மதிப்பு 8 சதவீதமாக குறைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவிக்கு வரும் போது, உலகின் முன்னணி நாணயமாக அமெரிக்க டொலரை மேலும் ஒருங்கிணைப்பது அவரது குறிக்கோளாக இருந்தது.
எனினும், அவரின் பொருளாதாரக் கொள்கைகளே தற்போது அமெரிக்க டொலர் பலவீனமடைய காரணம் என கூறப்படுகின்றது.
ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அதிக வரி விதிப்புகளால் உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டது.
பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள்
மேலும், ட்ரம்பின் வரி கொள்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனா போன்ற நாடுகள் எடுத்த நடவடிக்கைகளும் உலக பொருளாதாரத்தை பாதித்தன.
இந்த நீடித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக முதலீட்டாளர்கள் டொலர் சொத்துக்களிலிருந்து விலகிச் செல்லும் போக்கு ஏற்பட்டது.
இதேவேளை, ஐரோப்பா மற்றும் ஜப்பானிலும் அதிக பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது போன்ற காரணங்களே டொலரின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |