வெளிநாட்டு கையிருப்பில் வீழ்ச்சி
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்களின் அளவில் 2024 ஜூலை மாதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கைகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2024 ஜூன் மாதம் 5,654 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவான உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பு 2024 ஜூலை மாதம் 0.1% குறைந்து 5,649 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

அந்நியச்செலாவணி கையிருப்பு
உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூலை மாத இறுதியில் 5,574 மில்லியன் டொலராக இருந்தது. இது ஜூன் மாதம் பதிவான 5,605 மில்லியன் டொலர்களை விட 0.6% குறைவாகும்.
இதேவேளை, கடந்த ஜூலை மாதத்தில் இலங்கை மத்திய வங்கியின் தங்க கையிருப்பு 35 மில்லியன் டொலரில் இருந்து 37 மில்லியன் டொலர்களாக 5.2% அதிகரித்துள்ளது.

உத்தியோகபூர்வ சொத்து கையிருப்பு
இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான, சீன மக்கள் வங்கியின் அந்நியச் செலாவணி வசதியிலிருந்து பெறப்பட்டவை உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இதன் பயன்பாடு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Neeya Naana: மனைவியின் எதிர்பார்ப்பால் பேச முடியாமல் நின்ற கோபிநாத்... பரிதாப நிலையில் கணவர் Manithan
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri