சிறுவன் ஒருவனை தூக்கி செல்ல முயன்ற இராட்சத பருந்து
பொலனறுவை (Polonnaruwa) பிரதேசத்தில் இராட்சதப் பருந்து ஒன்று, முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை தூக்கிச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குறித்த இராட்சதப் பருந்தால் பிரதேச மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை திடீரெனப் பருந்து தூக்கிச் செல்ல முயன்றப் போது, அதனைக் கண்ட தந்தை கூக்குரலிட்டதையடுத்து பருந்து சிறுவனை போட்டு விட்டு சென்றுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
அதனையடுத்து, பருந்து தூக்கியதால் காயமடைந்த சிறுவன், பொலனறுவை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளார்.
எனினும், சிறுவன் இதுவரை அச்சத்தில் இருந்து மீளவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த பருந்தை விரட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினர், நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச வாசிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
