சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள போலி தலதா மாளிகை! மேர்வின் சில்வா விடுத்துள்ள எச்சரிக்கை
குருநாகல் - வடகட வீதியில், பொத்துஹெர என்ற இடத்தில் ஜனக சேனாதிபதி என்ற நபரால் போலியான போலி தலதா மாளிகை நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சசையை ஏற்படுத்தியிருந்தது.
போலி தலதா மாளிகை கட்டுக்கதையால் பல உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏமாற்றப்பட்டு பணம், தங்கம் போன்றவற்றை நன்கொடையாக வழங்கியள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், போலி தலதா மாளிகையொன்று உருவாக்கப்பட்டு நிர்மாணிக்கப்படுவதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கையை விடுத்து சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இவ்வாறானதொரு பின்னணியில், இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று குறித்த விகாரை பகுதிக்கு சென்றுள்ளார்.
இதன்போது குருநாகல், பொதுஹெர அஹுகுடா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட விகாரையை நாளை (08) உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளதுடன், அதன் ஸ்தாபகர் ஜனக சேனாதிபதி என்ற நபர் அதனை அகற்றுவதற்கு இணங்கியுள்ளார்.
தலதா மாளிகையைப் பின்பற்றி கட்டப்பட்ட பகுதியை இரண்டு வாரங்களுக்குள் இடித்துவிட்டு வித்தியாசமான முறையில் கட்டுமாறும், கீழ்ப்படியவில்லை என்றால், இப்போதே இதனை உடைப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த இடத்தில் நடத்தப்படும் தேவாலயத்திற்கு சில ஆதரவை வழங்கவும் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
