பொலிஸார் போன்று வேடமணிந்து வீட்டினுள் நுழைந்த மூவரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி
குருநாகல் பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமணிந்து வீட்டினுள் நுழைந்து பெண்ணொருவருடன் தகாத முறையில் நடந்ததாகக் கூறப்படும் மூவர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்கரவத்தை பகுதியில் உள்ள தென்னை நார் ஆலை ஒன்றில் பணிபுரிந்து அதே இடத்தில் உள்ள தொழிலாளர் இல்லத்தில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த 26ஆம் திகதி செய்த முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 25ஆம் திகதி இரவு தானும் தனது குடும்பத்தாரும் வீட்டில் இருந்த போது மூன்று பேர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என அறிமுகம் செய்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்ததாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களின் அடையாள அட்டைகளை சரி சரிபார்த்தவுடன் அவர்களின் ஆடைகளை கிழித்து தகாத முறையில் நடந்து கொண்டதாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை முறைப்பாட்டாளர் அடையாளம் காணவில்லை என கூறியுள்ளார்.
ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri