தேர்தல் குறித்து பிரசுரிக்கப்படும் செய்திகள் தொடர்பில் ஆணைக்குழு எச்சரிக்கை
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கு புறம்பாக வெளியிடப்படும் செய்திகள் குறித்து பொருட்படுத்த வேண்டாமென்று தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிவித்தலிலேயே இவ்விடயம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், "இன்றைய தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்குப் புறம்பாக பல்வேறு நபர்களும் அமைப்புகளும் தேர்தல் செயன்முறை சம்பந்தமாக அதாவது வாக்கு அடையாளமிடும் விதம், வாக்குகளையும் விருப்புகளையும் எண்ணும் விதம், தேர்தல் சட்டங்களை வலுவாக்கம் செய்தல் மற்றும் பிரசார நடவடிக்கைகளும் வேறு நிர்வாகம் சார்ந்த பணிகளும் குறித்து அடிக்கடி தெரிவித்து வரும் கூற்றுக்களும் அபிப்பிராயங்களும் ஊடகங்கள் வாயிலாக பிரசாரம் செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது.
தெளிவு பெற வாய்ப்பு
அவை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் அல்ல என்பதும், அவ்வாறான கூற்றுக்கள் எவையும் உத்தியோகபூர்வ செல்லுபடித்தன்மை அற்றவை என்பதும், அவை சம்பந்தமான பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என்பதும் இத்தால் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் செயன்முறைக்குரிய எந்தவொரு விடயமும் சம்பந்தமாக பிரஜை எவருக்கும் தேர்தல் ஆணைக்குழுவை வினவி தெளிவு பெறுவதற்கு வாய்ப்புண்டு.
தேர்தல் ஆணைக்குழு இத்தேர்தலின் போது பொதுமக்கள் அறிவுறுத்தப்பட வேண்டிய அனைத்து விடயங்களும் பணிகளும் தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்புகளைச் செய்வதன் காரணமாக வேறு நபர்களும் அமைப்புகளும் வெளியிடும் கூற்றுக்களையும் அபிப்பிராயங்களையும் அறிவுறுத்தல்களையும் பொருட்படுத்த வேண்டாமென்று மேலும் அறிவித்தல் கொடுக்கப்படுகிறது" என வலியுறுத்தப்பட்டுள்ளது.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 13 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
