சமூக ஊடகத்தில் போலி செய்தி வெளியிட்ட நபர் கைது
சமூக ஊடகத்தில் போலியான செய்திகளை வெளியிட்ட நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குற்ற விசாரணைப் பிரிவினர் நடாத்திய விசாரணைகளின் மூலம் குறித்த சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வானொலி நிலையமொன்றின் இலச்சினையை பயன்படுத்தி குறித்த நபர் போலி செய்தியொன்றை வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இனக் குரோதத்தை தூண்டும் வகையில் இந்த செய்தி அமைந்திருந்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
31 வயதான குறித்த சந்தேக நபரை பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காப்புறுதி நிறுவனமொன்றின் இணைய வடிவமைப்பாளராக குறித்த சந்தேக நபர் கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என நீதிமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் படங்கள்.. முழு விவரம் இதோ Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam