சமூக ஊடகங்களில் தம்மை குறிவைத்து போலிச்செய்திகள்: பிரதியமைச்சர் ஒருவரின் முறைப்பாடு
சமூக ஊடகங்களில் தன்னை குறிவைத்து, தொடர்ந்து போலிச் செய்திகள் பரப்பப்படுவதாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க (Chathuranga Abeysinghe) பொலிஸில் முறையிட்டுள்ளார்.
இந்த தவறான தகவல் பிரசாரத்தில் வேண்டுமென்றே புனையப்பட்ட உள்ளடக்கம் இருப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்
பல ஆண்டுகளாக, குறித்த சிலர் ஜேவிபி தலைவர்களை சேறு பூசித் தாக்கினர். ஆனால் இறுதியில், மக்கள் தங்கள் பதிலைக் கொடுத்தனர்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
இந்தநிலையில், ஊழல் ஒட்டுண்ணிகளால் வழிநடத்தப்படும் அரசியலின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணத்தைத் துரத்தும் சில சமூக ஊடகப் பக்கங்கள் இன்னும் இருந்தாலும், இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
