அஜித் ரோஹணவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பகிரப்படும் போலி காணொளி
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும், முன்னாள் பொலிஸ் ஊடக பேச்சாளருமான அஜித் ரோஹணவின் உடல்நிலை தொடர்பில் போலி தகவல்கள் மற்றும் காணொளி, புகைப்படங்கள் பகிரப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
அஜித் ரோஹண கோவிட் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அவரது உடல்நிலை தொடர்பில் கவலையடைய தேவையில்லை என வைத்தியசாலை வட்டார தகவல்கள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே அவரின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் படங்கள் மற்றும் காணொளிகள் என்பன போலியானவை என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அவரின் உடல்நிலை தற்போது வழமைக்கு திரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்...
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri