பொலன்னறுவையில் சிக்கிய போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள்! மூவர் கைது
போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து வழங்கிய குற்றச்சாட்டில் பொலன்னறுவை(Polonnaruwa) பிரதேசத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பிற வாகன உரிமங்களை தயாரித்து பணம் பெறும் மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவரை பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று(10) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்துள்ளனர்.
மனம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 48வயதுடையவரான குறித்த சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, அவரிடம் இருந்து 19 போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மூவர் கைது
அதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் பிரகாரம், வேரஹெர மோட்டார் வாகன திணைக்கள அலுவலகம் அருகே சாரதி பயிற்சி பாடசாலை நடத்தும் ஒருவரையும், நாரஹேன்பிட்ட மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திர அலுவலகம் அருகே போலி சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்த ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 39 மற்றும் 60 வயதுடைய பொரலஸ்கமுவ மற்றும் நாரஹேன்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களிடமிருந்து மூன்று போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள், ஆறு கைப்பேசிகள், ஒரு கணினி மற்றும் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொலன்னறுவை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மனம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |