தென்னிலங்கையில் பெருந்தொகை போலி அமெரிக்க டொலர்களுடன் சிக்கிய வெளிநாட்டவர்கள்
காலி பகுதியில் போலி டொலர் மோசடியில் ஈடுபட்ட 2 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 27 வயதுடைய தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் பிற்பகல் உனவட்டுன பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் வாடகைக்கு விடும் இடமொன்றுக்கு வந்து, 400 டொலர்களை கொடுத்து இலங்கை நாணயப்படி 127,000 ரூபாயை மாற்றியுள்ளனர்.
போலி டொலர்கள்
பின்னர் அங்கிருந்த பெண், அந்த டொலர்கள் போலியானவை என்பதைக் கண்டறிந்து உனவடுன சுற்றுலா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், காலி பகுதியில் உள்ள தங்குமிடம் ஒன்றில் தங்கியிருந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 5,200 போலி டொலர்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.