40 ஆயிரம் போலி வைத்தியர்கள்: நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல் - செய்திகளின் தொகுப்பு
நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
பல பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்கள், எந்தவொரு தகைமையும் இன்றி, நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதாக ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது பாரிய பாரதூரமான விடயமாகும். குறித்த விடயம் தொடர்பில், பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருவதாகவும் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




