யாழில் போலி உருத்திராட்ச பழங்கள்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
யாழ்ப்பாண நகர் மற்றும் நல்லூர் பகுதிகளில் அண்மைய நாட்களில் உருத்திராட்ச பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அது போலியானது எனத் தெரிய வந்துள்ளது.
தென்னிலங்கையில் இருந்து வரும் வியாபாரிகள், உள்ளூர்வாசிகளைப் பயன்படுத்திக் குறித்த விற்பனை ஈடுபட்டிருந்ததுடன் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றிருந்த நிலையிலேயே தற்போது இவ்விடயம் அம்பலமாகியுள்ளது.
ஏமாற்றி விற்பனை
தென்னிலங்கையில் காணப்படுகின்ற 'நில் வெரழு' (Blue Olive) என அழைக்கப்படும் பழங்கள் உருத்திராக்க பழங்களை போலுள்ளதால் அதனை ஏமாற்றி விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உருத்திராட்சம் மரம் இமயமலை சாரலில் தான் வளரும். இலங்கையில் உருத்திராட்சை மரம் இருப்பதாக இன்று வரையும் பதிவு இல்லை என்றும் கூறப்படுகிறது.
பொதுமக்கள் இவ்வாறான வியாபாரிகளிடம் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு
கோரப்படுகிறது.





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam
