மீண்டும் ஒரு முடக்க நிலை அபாயம் ஏற்படும் : யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை(Video)
அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து இன்றையதினம் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்ட சுகாதார மேம்பாட்டுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கோவிட், டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவலைத் தடுப்பது பற்றியும் ஆராயப்பட்டது. யாழ் மாவட்டத்தில் இதுவரை 19,062 பேர் கோவிட் தொற்றாளர்களாகவும் 502 இறப்புக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது 35 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். தடுப்பூசியைப் பொறுத்தவரை 30 வயதுக்கு மேல் 309,839 பேரும் 29 தொடக்கம் 20 வயதுடையவர்களில் 56000 பேரும் 12 தொடக்கம் 19 வயதுடையவர்களில் 57265 பேரும் முதலாவது டோசை பெற்றுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி என்பதை 88,800 பேர் பெற்றுள்ளனர்.
முதலாம், இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள், பூஸ்டர் தடுப்பூசியைக் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். 30 வீதமானவர்களே பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெற்றுள்ளனர்.
ஒமிக்ரோன் திரிபு தற்போது பரவிவரும் நிலையில் யாழ் மாவட்டத்திலும் அது பரவுவதற்கான நிலைகள் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அவசியம்.
இதற்கமைய, எதிர்வரும் 31 ஆம் திகதி முதல், பூஸ்டர் தடுப்பூசி வாரம்
பிரகடனப்படுத்தவுள்ளோம்.
பாடசாலை, போக்குவரத்து உட்பட அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள
நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க
நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 19 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri