உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகள் வெளிப்படும் : சஜித் உறுதி
மக்களின், குறிப்பாக கத்தோலிக்க சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையை அம்பலப்படுத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) உறுதியளித்துள்ளார்.
கொழும்பு (Colombo) பேராயர் இல்லத்திற்கு விஜயம் செய்த பிரேமதாச, கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் கொழும்பு பேராயர் உதவி ஆயர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டபோது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள்
இந்த விடயத்தில் உண்மையை வெளிக்கொணர ஒரு தெளிவான திட்டம் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்ட சஜித், ஏற்கனவே நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டதா என்றும், உண்மை முழுமையாக வெளிப்படுத்தப்பட்டதா என்றும் கத்தோலிக்க சமூகம் தலைமையிலான முழு தேசமும் கேள்வி எழுப்புவதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
