புத்தளத்தில் முன்னாள் படையதிகாரிகளை சந்தித்துள்ள உண்மையை கண்டறியும் குழு
சர்வதேச நிபுணர்கள் மற்றும் இலங்கையின் தமிழ் சிவில் சமூகம் என்பவற்றால் விமர்சிக்கப்பட்டு வரும், அரசாங்கத்தின் உண்மையை கண்டறியும் செயலகத்தின் அதிகாரிகள், புத்தளத்தில் பொலிஸார் மற்றும் வான்படையின் முன்னாள் அதிகாரிகளை சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பானது நல்லிணக்கம் தொடர்பான கருத்துக்களை அறிந்துக்கொள்ள நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர் தமிழ் சிவில் சமூகம்
இதன்போது சிறந்த கல்வி, சுகாதாரம், ஆசிரியர்களின் வெற்றிடங்கள் காரணமாக கல்வியின் பாதிப்பு மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்வு, காணி அபகரிப்பு போன்ற விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த செயலகத்தின் பணிகளை கைவிடுமாறு சர்வதேச மற்றும் உள்ளூர் தமிழ் சிவில் சமூகம் என்பன தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதோடு இது வெறும் கண்துடைப்பு என்று அவை விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
