பாரிய குழிகளுடன் மோசமான நிலையில் ஹட்டன்–விக்டன் பாதை! பாதிக்கப்பட்டுள்ள 5,000 மக்கள்

Sri Lankan Peoples Hatton
By Malaivanjan Sep 21, 2026 07:17 AM GMT
Report

ஹட்டன் நகரிலிருந்து விக்டன் பகுதிக்குச் செல்லும் பிரதான பாதையின் சுமார் 6 கிலோமீற்றர் பகுதி நீண்டகாலமாக மோசமான நிலையில் காணப்படுவதால், அந்த பகுதியில் வசிக்கும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் நகரிலிருந்து சுமார் 11 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்தப் பாதையின் பல பகுதிகளில் பாரிய குழிகள், பாறைகள் மற்றும் கரடுமுரடான பாதைகள் காணப்படுவதுடன், தற்போது பாதையில் உள்ள பாலமொன்றும் சேதமடைந்த நிலையில் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

 நிரந்தரத் தீர்வு

சுமார் 20 ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை எனவும், பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும், எதிர்பார்த்த அளவில் பாதை அபிவிருத்தி செய்யப்படவில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.

பாரிய குழிகளுடன் மோசமான நிலையில் ஹட்டன்–விக்டன் பாதை! பாதிக்கப்பட்டுள்ள 5,000 மக்கள் | Facing Various Difficulties Due Poor Condition

இந்தப் பாதையைப் பயன்படுத்தி பிட்டவின் ஆரம்ப வித்தியாலயம், விக்டன் ஆரம்ப வித்தியாலயம் மற்றும் கணேஷா வித்தியாலயம் உள்ளிட்ட பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் நாளாந்தம் பயணித்து வருகின்றனர்.

மேலும், உயர்தரக் கல்விக்காக வெளிப்பிரதேசங்களுக்குச் செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள், பட்டதாரிகள், தொழிலாளர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட பலரும் இந்தப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். ருவன்புர, பிட்டவின், விக்டன் மேல்பிரிவு, பின்னோயா மேற்பிரிவு, பின்னோயா பி பிரிவு, விக்டன் கீழ்பிரிவு மற்றும் குருவத்தை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் இந்தப் பாதை நேரடியாக தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதையின் மோசமான நிலை

குறிப்பாக அவசர சுகாதார நிலைமைகளில் நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லும் போது, மோசமான பாதை காரணமாக பயண நேரம் அதிகரிப்பதுடன், நோயாளிகளும் குடும்ப உறுப்பினர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பாரிய குழிகளுடன் மோசமான நிலையில் ஹட்டன்–விக்டன் பாதை! பாதிக்கப்பட்டுள்ள 5,000 மக்கள் | Facing Various Difficulties Due Poor Condition

அதேபோன்று, மாணவர்கள் பாடசாலைகளுக்கும் பரீட்சைகளுக்கும் செல்லும் போதும், பொதுமக்கள் ஹட்டன் நகருக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அரச சேவைகளைப் பெறும் போதும் இந்தப் பாதையின் மோசமான நிலை பெரும் தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.

சேதமடைந்துள்ள பாலத்தையும், மோசமான நிலையில் காணப்படும் சுமார் 6 கிலோமீற்றர் பாதையையும் நிரந்தரமாக புனரமைத்து, பாதுகாப்பான போக்குவரத்துக்கு ஏற்ப மாற்றித் தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

பல ஆண்டுகளாக தீர்வுக்காக காத்திருக்கும் இந்த மக்களின் பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

வீதியில் கண்டெடுத்த ஒரு பவுண் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்

வீதியில் கண்டெடுத்த ஒரு பவுண் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்

காணாமல் போன 2.5 மில்லியன் டொலர்கள்.. அநுர கைது செய்யப்படலாம் - சஜித் தரப்பு கடும் குற்றச்சாட்டு

காணாமல் போன 2.5 மில்லியன் டொலர்கள்.. அநுர கைது செய்யப்படலாம் - சஜித் தரப்பு கடும் குற்றச்சாட்டு

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US