அரசியலமைப்பு ரீதியாக கோட்டாபயவிற்கு சலுகைகள் எதுவும் வழங்க முடியாது - முன்னாள் பிரதம நீதியரசர்
அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இல்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்ற ஜனாதிபதியல்ல, அவர் சேவையிலிருந்து விலகிய ஜனாதிபதி என முன்னாள் பிரதம நீதியரசர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் எதுவும் கிடையாது
இவ்வாறு சேவையில் இருந்து விலகிய ஜனாதிபதி ஒருவருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சலுகைகள் எதுவும் கிடையாது என முன்னாள் பிரதம நீதியரசர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்கள் உள்ளிட்ட எந்தவொரு சிறப்புரிமையும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இல்லை என சரத் என். சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 15 மணி நேரம் முன்

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
