ஹோட்டலுக்குள் நடந்த மோசமான செயல் - யுவதிகள் உட்பட 39 பேர் கைது
புத்தளத்தில் ஹோட்டல் ஒன்றில் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட யுவதிகள் உட்பட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வென்னப்புவ, வைக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்தொன்று சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது 39 சந்தேகநபர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வென்னப்புவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று பிற்பகல் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மட்டக்குளி, கனேமுல்ல, நீர்கொழும்பு, அனுராதபுரம், வத்தளை மற்றும் மீரிகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 மற்றும் 30 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகும்.
சந்தேகநபர்களிடம் 02 கிராம் 110 மில்லிகிராம் ஐஸ், 05 கிராம் ஹஷிஸ், 27 கிராம் கஞ்சா மற்றும் 15 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




