உலகளாவிய ரீதியில் வழமைக்கு திரும்பிய சமூக வலைத்தளங்கள்
புதிய இணைப்பு
உலகளாவிய ரீதியில் திடீரென முடங்கிய சமூக வலைத்தளங்கள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய சமூக வலைத்தள செயலிகள் இன்று (05) இரவு திடீரென முடக்கத்தை சந்தித்திருந்தன.
இந்நிலையில், செயலிழந்தமைக்கான காரணம் இன்னும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
எனினும் பல நாடுகளில் இன்னும் சேவை வழமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்கள் திடீரென முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உட்பட பல்வேறு நாடுகளிலும் இவ்வாறு சமூக வலைத்தளங்கள் முடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், மெசெஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்ற சமூக வலைத்தளங்களும் முடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளமைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், வாட்ஸ்அப் செயலி மாத்திரம் செயற்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு நேர்ந்துள்ள கதி! முடிந்தால் காப்பாற்றுங்கள் - சட்டத்தரணி அதிர்ச்சித் தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |