இலங்கையில் முகக்கவசங்களை முழுமையாக அகற்ற முடியுமா? வெளியானது உண்மைத் தகவல்
இலங்கையில் விரைவில் முகக்கவசங்களை முற்றாக அகற்ற முடியும் என்ற வதந்திகளில் உண்மையில்லை என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலக சுகாதார ஸ்தாபனம் முன்வைக்கும் தீர்மானங்கள் மற்றும் அறிவியல் காரணங்களின் அடிப்படையில் சுகாதாரத் திணைக்களம் மட்டும் இவ்வளவு தீவிரமான முடிவை எடுக்க முடியாது.
இதுவரை உலகில் முகக்கவசங்களை முற்றிலுமாக அகற்றிய நாடு எதுவும் இல்லை.
நாட்டிலுள்ள அனைவரும் கோவிட் தொற்றுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக் கொண்டதன் பின், பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் கீழ் முகக்கவசங்களை அகற்ற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்தி..
முகக்கவசங்களிலிருந்து விடுதலை? இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 11 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
